Tuesday 14 August 2012

தமிழ் என் சுவாசம்


தமிழ் பெரியதா? ஆங்கிலம் பெரியதா?

தமிழ் தான் பெரியது என்று ஒரு பக்கம் தமிழ் ஆர்வலர்களும், அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு சிலரும் பேசிக்கொண்டிருக்க...  மற்றொரு புறமோ இந்த உலகமே உள்ளங்கைக்குள் வந்த காலத்தில் தமிழை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்வது என்று பொருளாதார வல்லுனர்களும், கல்வியாளர்களும் சொல்லிகொண்டிருகின்றனர். இந்த பிரச்னை, முற்று புள்ளி வைக்க மறுக்கும் முடிவுரைகளாக ஒவ்வொரு மேடையிலும் அரங்கேறி கொண்டே இருக்கின்றது.

தமிழ் நமது தாய் மொழி. தாய்க்குத்தான் முதல் மரியாதையை என்பதில் எள்ளின் மூக்கு நுனி அளவிற்கும் ஐயம்மில்லை. அதற்காக ஆங்கிலமே தேவை இல்லை என்று நிராகரித்திட இயலாது.

தமிழை மட்டும் தெரிந்து கொண்டு வாழலாம் ஆனால் ஆங்கிலம் இல்லாமல் பொருளாதார ரீதியாகவும், பரந்த அறிவு வளர்ச்சின் ரீதியாகவும் வளர முடியாது  என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படியே நாம் ஆங்கிலத்திற்கு முதன்மை கொடுத்துகொண்டே இருந்தால் தமிழின் நிலை தான் என்ன? தமிழனே தமிழை வெறுக்க ஆரம்பித்தால் அதன் முடிவு மிகவும் விரும்பத்தகாததாக தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத மனம் கசக்கும் படியான உண்மை.

பின்பு என்ன தான் செய்வது???

எளிமையாக சிந்தித்தாலே போதும் என்றும் அழியாத மொழியகிவிடுவாள் நம் தமிழ்.

ஒவ்வொரு தமிழனும் தன் தாய் மொழியான தமிழை சுவாசிக்க வேண்டும், வாழ்கையின் முன்னேற்றத்துக்கு தேவையான மொழியினை நேசிக்க வேண்டும் அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி வேறு மொழியாக இருந்தாலும் சரி.

என்ன இப்படி ஒரு கருத்து என்று யோசிக்காதீர்கள்.

நேசம் என்பது மாறகூடிய ஒன்று. உதாரணமாக குழந்தையாக இருக்கும் போது அம்மா தான் எல்லாம், கொஞ்சம் பெரியவன் ஆனதும் பள்ளி (அ ) கல்லுரி படிக்கும் போது காதல் என்ற பெயரில் நேசம் ஒரு பெண்ணின் மீது செல்கிறது. அம்மாவின் மீது இன்னும் நேசமும் பாசமும்  இருந்தாலும் அதை விட அதிகமாக புதிதாக வந்த காதலியிடம் செல்கிறது பின்பு மனைவியிடம்  (காதலிதான் மனைவி ஆகா வேண்டும் என்று நிர்பந்தம் ஏதும் இல்லை இன்றைய இளைங்கர்களிடம்) பின்பு புதிதாக வரும் தங்கள் வாரிசுகளிடம் .... இவ்வாறாக நேசம் என்பது காலத்தின் மாற்றத்திற்கும், சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறிக்கொண்டே இருக்கும் .


அதுபோல இன்று நேசமாக ஆங்கிலம் இருக்கலாம் நாளை இது மாறும். ஆனால் சுவாசம் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை  ஒன்றே ஒன்று தான்.  நம் தாய் திரு தமிழ் மொழி நாம் (தமிழன் ) வாழும் வரை  என்றும் நம்மில் சுவாசமாக இருந்துகொண்டே இருக்கும் .


No comments:

Post a Comment