Thursday 23 August 2012

நண்பேன்டா!!!


  பாஸ்கரன் படத்தில் சந்தானமும், ஆர்யாவும் சேர்ந்து அடித்த லூட்டியை யாரும் மறந்து விட முடியாது. ஏனென்றால் அவர்களை போல் நமக்கும் நக்கலும், நையாண்டி உடன் கூடிய நண்பர்கள் உண்டு, நாமும் கூட  அப்படிபட்டவர்களாக இருக்கலாம். நல்ல நண்பர்களாக, சந்தோஷங்களையும் சோகத்தையும் பகிர்ந்து கொள்பவர்களாக இருக்கலாம்.

இப்போ நீ என்ன தான் சொல்லவர என்று கேட்கின்றீர்களா??? 

உலகத்திலேயே ஒரு உன்னதமான ஒரு உறவு நட்பு... 

இது தான் எல்லோருக்கும் தெரியும் என்று நீங்கள் முனுமுனுப்பது என் காதுகளுக்கு நன்றாகவே கேட்கின்றது. 

காதலுக்காக எத்தனையோ  திரைப்படங்கள்... நட்ப்புக்காகவும் எத்தனையோ திரைப்படங்கள். காதல் குறுஞ்செய்திகள்... நட்பு குறுஞ்செய்திகள்... இப்படி காதலும் நட்பும் போட்டி போட்டு கொண்டு நம் மனங்களில் மழைச்சாரல் வீசினாலும் காதலை விட நட்பு உயர்வாகவே வைத்து போற்ற படுகிறது நமது உள்ளங்களில்...

"தாயோடும் சில தயக்கங்கள் உண்டு ஆனால் தோழமையில் அது கிடையாது"
தாரத்துக்கு கூட தெரியாத எத்தனையோ உண்மைகள் நட்பு என்ற நம்பிக்கையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

காதல் மாறிக்கொண்டே போகும், நட்பு என்பது கூடிக்கொண்டே போகும்.

நம்பிக்கையான ஒரு நண்பன் மட்டும் கிடைக்கப்பெற்றால் அது தான் நீங்கள் செய்த      ஒட்டுமொத்த புண்ணியங்களின் பலன் என்பதை மறந்து விடாதீர்கள்.

காரியத்திற்காக உங்களோடு கை கோர்தவர்களிடம் கனவிலும்  இந்த நம்பிக்கையை எதிர்பார்த்து ஏமாந்து விடாதீர்கள். 

இந்த அறிய வரம் அனைவருக்கும் வாய்க்கப்பெறுவதில்லை.. 

"Don't share all things with your close friend, because your close friend may become worst enemy of tomorrow" என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். 

உன்னுடைய நெருங்கிய நண்பன் தான் என்று அனைத்து ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ளாதே; நெருங்கிய நண்பன் மிக மோசமான எதிரியாக உருவாகலாம் என்பார்கள்.. இது உண்மையும் கூட... 

நண்பன் தானே என்று மறைக்கப்பட வேண்டிய உண்மைகளை நண்பனிடம் மறைக்காமல் சொன்னதிற்காக எத்தனையோ பேர் பல இன்னல்களைப் பெற்று இதயம்  இரனமாகிருக்ககூடும். 

பின்பு என்ன தான் செய்வது.... கவலைகளையும், குதூகலங்களையும் யாரிடம் தான் பகிர்வது...  

புத்தகம்!!!!

ஆம். புத்தகம் தான் ஒரு சிறந்த நண்பனாக, நம்பிக்கையானவனாக ஒவ்வொரு மனிதனின் உள்ளங்களையும் உளி இல்லாமல் சிலைகளாய் செதுக்கமுடியும்.  

உங்கள் கண்ணீருக்கும், காயங்களுக்கும் கட்டு கட்டி மருந்து போட்டு மறக்கடிக்கும் நல்ல நண்பன் புத்தகங்களே.....

மகிழ்ச்சியால் நீங்கள் இந்த நில உலகை மறக்கும் போது, உங்கள் ஆன்மாவை அமைதி படுத்துவதும் புத்தகங்களே...    

உங்களிடம் யாரவது ஒரு நற்பண்பை கற்று கொடுக்க சொன்னால் வாசிப்பு பழக்கத்தை மட்டும் கற்று கொடுங்கள் மற்றதெல்லாம் தானாக நடக்கும்.. அதற்கு நீங்கள் முதலில் புத்தக ருசியை ருசித்து பார்க்க வேண்டும். 

"Today's Readers
Tomorrow's Leaders"

 என்று எனதுஆசிரியர் சொன்னது மீண்டும் மீண்டும் என் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கின்றது.. 

உங்கள் வாழ்கையை மாற்றும் அந்த நிமிடம் நீங்கள் வாசிக்க ஆரம்பித்ததுடன் தொடங்குகிறது.... 

No comments:

Post a Comment